Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்…ஆட்டோவின் கூரையில் பயணித்த மாணவர்கள்… வழக்கு பதிவு செய்த போலீசார்…!!!!!

ஆட்டோ ரிக்சாவின் மேல் அமர்ந்து மூன்று மாணவர்கள் பயணித்ததை காட்டும் வீடியோ பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் 11-13 வயதிற்குட்பட்ட மூன்று மாணவர்கள் ஆட்டோவில் மேல அமர்ந்து பயணிப்பதை கேமராவில் ஒருவர் பதிவு செய்து சமூக ஊடகங்கள் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ வைரலானது தொடர்ந்து அடையாளம் தெரியாத டிரைவர் மீது பரேலியில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பலர் விமர்சனம் செய்திருக்கின்றனர். மேலும் ட்விட்டர் பயனர் ஒருவர் வீடியோவை பகிர்ந்து கொண்டு இவ்வளவு கவனக்குறைவான ஆட்டோ ஓட்டுநரை நம்பி எப்படி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும் உத்திரப்பிரதேசம் பரேலியில் நடைபெற்ற சம்பவம் இது இந்த ஆட்டோ வெள்ளிக்கிழமை ஆர்டிஓ அலுவலகம் நகடியா போலீஸ் அவுட் போஸ்ட்டை கடந்து சென்றிருக்கின்றது. ஆனால் அனைவரும் கடமை செய்யாமல் தூங்கி விட்டனர் போலவும் இது தொடர்பாக இந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பதிவிட்டு இருக்கிறார்.

 

 

 

இந்த வீடியோவை பார்த்த பரேலி போலீசார் தானாக முன்வந்து பிரிவு 279 கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்து இருக்கின்றார். அவர்கள் பதிவிட்ட ஒரு வீட்டில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனருக்கு அபராதம் விதித்திருப்பதாகவும் விதிகளின்படி சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் குழந்தைகளின் பெற்றோரை தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கண்டோமெண்ட் காவல் நிலைய எஸ்.எச் ஓ ராஜீவ் குமார் இது பற்றி பேசும்போது மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக அடையாளம் தெரியாத ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றோம். மேலும் ஆட்டோ கூரையில் அமர்ந்திருந்த அனைத்து குழந்தைகளும் பள்ளி சீருடைகள் காணப்பட்டிருக்கின்றனர். இதுபோன்ற ஓட்டுனர்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அனுமதிக்க கூடாது என்பதை உறுதி செய்ய பள்ளி நிர்வாகத்துடன் பேசுவோம் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளார்

Categories

Tech |