Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்…..தந்தையை கொன்று புதைத்த மகன் தலைமறைவு… தேடி வரும் 5 தனிப்படை போலீசார்…!!!!

பெத்த மகன் தந்தையை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் குடியிருந்து வந்தவர் 75 வயதுடைய குமரேசன். இவர் மத்திய அரசு ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளார்கள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவருடைய மகன் குணசேகரன் தனது மனைவி, பிள்ளைகளுடன் முதல் தளத்திலும், குமரேசன் தனது மூத்த மகள் காஞ்சனமாலாவுடன் இரண்டாவது தளத்திலும் வசித்து வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி காஞ்சனமாலா அவருடைய மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தந்தை காணவில்லை. உடனே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த கரைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் குணசேகரன் தந்தையை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் அவருடைய மகன் குணசேகரன் தலைமறைவாகி இருந்தார். இதுகுறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது தந்தை குமரேசனை கொலை செய்து காவேரிப்பாக்கத்தில் இருக்கின்ற ஒரு இடத்தில் புதைத்து வைத்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் கொலையை மறைக்க காரணமாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் திருமூர்த்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவருடைய முன்னிலையில் உடலை தோண்டி எடுத்தார்கள். இதனையடுத்து நேற்று தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ முன்னிலையில் புதைக்கப்பட்ட குமரேசனை உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு அவருடைய உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து தலைமறைவாக இருக்கின்ற குணசேகரனை பிடிப்பதற்கு 5 தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தந்தையை எதற்காக கொலை செய்தார்? என்பதற்கான காரணம் குணசேகரன் பிடிபட்டால் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |