சில நாட்களுக்கு முன்பாக காணாமல்போன வங்காளதேசத்தில் பார்டமன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரபல நடிகை தலைநகரில் சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தில் ரைமா இஸ்லாம் என்பவர் 25 க்கும் மேலான படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவராக வலம் வந்துள்ளார். இவர் முதன்முதலாக பார்டமன் என்ற படத்தின் மூலமாகதான் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
இதனையடுத்து இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக காணாமல் போயுள்ளார். இதனை தொடர்ந்து அவரது கணவர் காவல் நிலையத்தில் ரைமா இஸ்லாம் காணாமல் போயுள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ரைமா தலைநகர் டாக்காவின் புறநகரில் சாக்குமூட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான தகவலை பொதுமக்கள் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்கள்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் ரைமாவின் சடலத்தை மீட்டு அவரது மரணம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.