வீட்டிலிருந்தபடியே வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான உணவு, மளிகை பொருட்கள் ஆர்டர் செய்து ஸ்விக்கி மூலமாக பெற்று வருகின்றனர். மேலும் மளிகை பொருட்களை இன்ஸ்டா ஸ்மார்ட் என்ற பெயரில் சூப்பர் பாஸ்ட் டெலிவரியும் செய்து வருகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தினம்தோறும் டெலிவரி செய்து வரும் சேவையை சூப்பர் டெய்லி என்ற பெயரில் ஸ்விக்கி நிறுவனம் செய்து வருகின்றது.
இந்த சூப்பர் டெய்லியில் தினந்தோறும் தேவைப்படும் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் சந்தா அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிறுவனமாகும்.இந்த நிலையில் இந்த சேவையில் எதிர்பார்த்த அளவில் லாபம் கிடைக்காததால் பெங்களூர் தவிர சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நான்கு நகரங்களில் சூப்பர் டெய்லி சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.