தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் பேரழிவை சந்திக்க உள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும், அது வேகமாக பரவி வருவதாகவும் அச்சம் நிலவி உள்ளது. இந்நிலையில் தமிழகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் நீர் கோபுரமாக விளங்கும் மேற்குத்தொடர்ச்சி மலை பேரழிவை சந்திக்க உள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
காலநிலை மாற்றம், பலத்த மழை, நீர்-காற்று மாசுபாடு, சுரங்கம், குவாரி,காட்டுத்தீ போன்றவற்றால் பேரழிவிற்கு உட்படுத்துகின்றன. உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்யவில்லை எனில் இந்த மலையை நம்பியுள்ள மக்கள் வாழ்க்கையும், அவற்றின் பல்லுயிர் பெருக்கமும் மோசமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது.