விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் கதாநாயகி கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் வெங்கடேஷ்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.