Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! தடுப்பூசி செலுத்திய 30 பேர் ரத்தம் உறைந்து….. 7 பேர் உயிரிழப்பு…!!!

உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஆஸ்ட்ரோசெனிகா கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் ரத்த உறைவால் பாதிக்கப்பட்டிருந்த 30 பேர்களில் 7 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் சில இதே காரணத்துக்காக ஆஸ்ட்ரோசெனிகா தடுப்பு மருந்துக்கு தடை விதித்துள்ள நிலையில் இங்கிலாந்தில் இது நடந்துள்ளது. இதுபற்றி ஏப்-7ல் மருந்துகள் யூனியன் அறிவிப்பு வெளியிட உள்ளது.

Categories

Tech |