Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு…. கொரோனா தொற்று…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்து விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.  இந்நிலையில் இந்தியாவில் கோவிஷீயீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்து அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைச்சர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஜராத் அமைச்சர் ஈஸ்வரன் பட்டேலுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. ஆகையால் என்னுடன் தொடர்பில் இருந்தார் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

Categories

Tech |