Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி…! நடிகர் மரணம்…. கண்ணீருடன் பெற்றோர் எடுத்த முடிவு…!!!!

செல்லோ ஷோ படத்தில் நடித்த சிறுவன் ராகுல் கோலி (15) புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா சார்பாக இந்த வருடம் ஆஸ்கர் விருது போட்டிக்கு குஜராத் மொழி திரைப்படமான செல்லோ ஷோ என்ற படம் தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறுவன் ராகுல் கோலி நடித்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இந்த சிறுவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான குஜராத்தி மொழி திரைப்படமான செல்லோ ஷோ வெளியாகும் முன்பே ராகுல் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அக்.,14-ல் வெளியாகும் இந்த படத்தை தியேட்டரில் பார்த்த பிறகே ராகுலுக்கு இறுதி சடங்கை செய்வோம் என அவரது பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |