பெங்களூரு விமான நிலையத்தில் படப்பிடிப்புக்காக சென்றபோது நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி அவ்வபோது பெங்களூர் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஏனென்றால் அவர் ஒரு தனியார் நிகழ்ச்சியான “மாஸ்டர் செப்” என்ற சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.. அதன் 2 நாள் படப்பிடிப்புக்கு நேற்று நள்ளிரவு விஜய் சேதுபதி பெங்களூர் சென்றிருந்தார்.. அப்போது ஒரு நபர் அவரை கேலி செய்ததாகவும், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு போலீசார் அவர்களை கலைத்துவிட்டு, போலீஸ் பாதுகாப்புடன் விஜய் சேதுபதி சென்று கொண்டிருந்தார்..
பின்னர் கேலி செய்த நபர் திடீரென்று பின்புறம் வந்து அவரை எட்டி உதைத்துள்ளார்.. அதற்கு பிறகு காரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றது.. போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அந்த மர்ம நபரை விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Night Actor #VijaySethupathi PA attacked in Bengaluru Airport. The Pa reportedly was clearing the walk way for @VijaySethuOffl. When PA pushed a person. In rage, the person kicked him from the back.
No case registered. pic.twitter.com/tq7zQ1sDWM
— Milagro Movies (@MilagroMovies) November 3, 2021