Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! நாடு முழுவதும் இனி கட்டாயம் – அதிரடி அறிவிப்பு…!!

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதை வருடந்தோறும் மருத்துவ படிப்பிற்கு சேர விருப்பமுள்ள மாணவர்கள் எழுதி வருகின்றனர். மேலும் இந்த தேர்வினில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும்.  மூலம் சில  வீணாகி போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இந்த தேர்வு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நீட் தேர்வால் நிறைவேறாமல் போகிறது. இதனால் பல தற்கொலைகளும் அரங்கேறி வருகின்றன.

ஆனாலும் மத்திய அரசு நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் -1 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்றுமொரு அதிர்ச்சிகரமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த வருடம் முதல் B.SC Nursing, B.SC life science படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு கட்டாயம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |