நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொடிய கொரோனாவானது சாமானிய மக்களை மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரையும் விட்டுவைக்கவில்லை. அவ்வகையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நந்தகுமார் சிங் சவுகான் காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.