கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மொனகனூரில், நாகப்பா- சுமா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். நாகப்பா ஒரு விவசாயி ஆவார். நாகப்பாவுக்கும் அவருடைய மனைவி சுமாவுக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாகப்பாவுக்கு தன் மனைவியின் நடத்தையில் வந்த சந்தேகம். அதனால் கடந்த டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி நாகப்பா தன் மனைவியை அடித்து கொலை செய்து விட்டார். இதையடுத்து யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவரின் உடலை தன் வீட்டில் ஒரு பள்ளம் தோண்டி புதைத்து விட்டார்.
அதன் பின்னர் அந்தப் பிணத்தின் மீது சுமார் 12 நாட்களுக்கு மேல் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சுமாவின் பெற்றோர் தங்களின் மகளிடமிருந்து எந்த தகவலும் இல்லாததாலும், போனை எடுக்காததாலும், சந்தேகப்பட்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் தன் மனைவியைக் கொன்று வீட்டில் புதைத்து வைத்த விவரத்தைக் கூறினார். அதன் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டில் இருந்த அந்த பெண்ணின் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டனர். அதன் பின்னர் நாகப்பாவிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.