மும்பை அவிக்னா பார்க் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மும்பை கறி சாலை (Curry Road) அவிக்னா பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சரியாக இன்று காலை 11:55 அளவில் தீ விபத்து என்பது ஏற்பட்டிருக்கிறது.. தீ மளமளவென பரவி தற்போது கொழுந்துவிட்டு எரியும் நிலையில், கிட்டத்தட்ட 14 தீயணைப்பு வாகனங்களில் வந்திருக்கக்கூடிய தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்,, இதில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது,, தீ விபத்து ஏற்பட்டவுடன் அந்த 19 ஆவது மாடியில் இருந்து தப்பிக்க முயன்ற ஒரு நபர் அந்த பகுதியின் பின்பகுதியில் தொங்கிய நிலையில், கீழே தவறி விழுந்துள்ளார்.
பின்னர் உடனடியாக அவரை அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 100க்கும் மேற்பட்ட நபர்கள் அந்த மாடியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.. அதே நேரத்தில் தீயை அணைக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்றும், முழுநேர அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மும்பை மேயர் தற்போது குடியிருப்பு பகுதியை பார்வையிட்டு அந்த தீயை அணைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு தேவையான சிகிச்சை உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது அந்த பகுதி முழுவதும் புகையாக காட்சியளிப்பதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.. அதே நேரத்தில் போக்குவரத்து என்பது முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தற்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ச்சியாக ஒரு சிலர் காயமடைந்ததாக தகவல்கள் தெரியவந்துள்ளது..