இயக்குனர் ஐஸ்வர்யா செய்த காரியத்தால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா. இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிறகு இருவரும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். தொடர்ந்து ஐஸ்வர்யா முசாபீர் என்ற ஆல்பம் பாடலை தயாரித்து இயக்க ஆரம்பித்தார். இடையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் சிறிது காலம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் முசாபீர் பாடலை இயக்க ஆரம்பித்தார். இப்பாடல் பல மொழிகளில் உருவாகி வருகின்றது. பாடலின் ப்ரோமோ வீடியோவானது காதலர் தினத்தன்று வெளியானது. அதில் ஐஸ்வர்யா பெயரின் பின்னல் தனுஷின் பெயர் இல்லை. அப்பா ரஜினிகாந்தின் பெயர் தான் இடம்பெற்றுள்ளது.
இப்பாடலானது தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் மகளுக்கும் மும்பையைச் சேர்ந்த பையனுக்கும் காதல் ஏற்படுகிறது. இதுவே முசாபீர் ஆல்பம் பாடல். அண்மையில் ஐஸ்வர்யா பாடலின் படப்பிடிப்பு முடிவடைந்தது இன்ஸ்டால் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது பாடல் குறித்து அப்டேட்களை பகிர்ந்து வந்தார். தற்போது பாடலின் அனைத்து வேலைகளும் முடிந்து கூடிய விரைவில் வெளியாகும் என செய்தியை புதிய போஸ்டருடன் இன்ஸ்டால் பதிவிட்டிருக்கிறார். இதிலும் ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் தனுஷின் பெயரை போடாவில்லை. இதைப்பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அண்ணாவின் பெயரை இணைந்து இருக்கின்றது. ஆனால் முசாபீர் பாடலில் மட்டும் அண்ணாவின் பெயரில் இணைக்கவில்லை. சீக்கிரமே இணைத்து விடுங்கள் கூடிய விரைவில் இணைந்து வாழுங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.