Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி…. யார் கண் பட்டதோ தெரியல…. இளம்பெண்ணை மணந்த 45 வயதான விவசாயி தற்கொலை… காரணம் என்ன?

இளம்பெண்ணை திருமணம் செய்த 5 மாதத்தில் 45 வயதான விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகில் சவுடனகுப்பே கிராமத்தை  சேர்ந்தவர் விவசாயி சங்கரண்ணா (45). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்ட 25 வயதான மேகனா என்ற இளம்பெண்ணை உறவினர்கள் சம்மதத்துடன் கோவிலில் வைத்து கல்யாணம் செய்துகொண்டார்.

சங்கர் அண்ணா வயதானவர் போல இருப்பதால் 60 வயது முதியவர் 25 வயது இளம் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரபரப்பாக வெளியானது. மேலும் இவர்கள் திருமணம் செய்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதையடுத்து கல்யாணத்திற்கு பின் சங்கரண்ணாவும், மேகனாவும் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு உள்ளார்கள்.

இந்நிலையில் சங்கரண்ணா திடீரென்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்யாணம் முடிந்த பின் சங்கரண்ணாவும் மோகனாவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். மோகனா தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மேகனாவுக்கும், சங்கரண்ணா தாய்க்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.

இதனால்  சங்கரண்ணாவிடம் மேகனா பெங்களூர் அல்லது மைசுருக்கு போய் அங்கு  தனிக்குடித்தனம் இருக்கலாம் என்று தெரிவித்தார். சங்கரண்ணா தாயை பிரிந்து வர மனம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் சங்கரண்ணாவுக்கும், மோகனாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சங்கரண்ணா கடந்த 28-ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்று அக்கிமிதி பாளையா கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி கேள்விப்பட்டதும் அங்கு சென்று மோகனாகவும் சங்கரண்ணாவின் தாயும், சங்கரண்ணா உடலைப் பார்த்து துடிதுடித்து போனார்கள். அதன் பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சூழ்நிலையில் சங்கரண்ணாவின் சாவுக்கு மோகனா தான் காரணம் என்று சங்கரண்ணாவின் தாயார் ஹிலியூர்துர்கா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யார் கண்பட்டதோ தெரியவில்லை திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் சங்கரண்ணா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |