Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி! விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி…. வீட்டில் தனிமை…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பலரும் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |