பிரிட்டனில் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்தவருக்கு ஆப்பிள் ஐபோன் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனிலுள்ள Twickenham என்ற பகுதியில் இருக்கும் டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களை நிக் ஜேம்ஸ் என்ற 50 வயதுடைய நபர் ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு கடைக்கு ஆப்பிள் பழங்களை வாங்கிச் சென்ற போது, கடையில் இருந்த ஊழியர்கள் உங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.
இதனால் ஏதோ ஒரு இனிப்பு வைத்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு பையை பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அந்தப் பையில் ஆப்பிள் ஐபோன் இருந்துள்ளது. இதனால் அதிர்ஷ்டசாலியான ஜேம்ஸிற்கு ஆப்பிள் பழம் வாங்க நினைத்து, ஆப்பிள் ஐபோன் கிடைத்துவிட்டது.
அதாவது டெஸ்கோ மொபைல் நிறுவனம், ஏப்ரல் 18-ஆம் தேதி வரை அவர்களிடம் பொருள் வாங்கும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அளித்து வருகிறது. இப்படி தான், ஜேம்ஸ் ஆப்பிள் ஐபோனுடன் மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்றுள்ளார்.