Categories
ஆன்மிகம் இந்து

அதிர்ஷ்டத்தை தரும் வெற்றிலை காம்பு ரகசியம்..!!

அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும்,துரதிர்ஷ்டம் விலகும். வெற்றிலை காம்பில் விளக்கு ஏற்றுங்கள், பயன் பெறுங்கள்..!!

வெற்றிலை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். தெய்வீகத் தன்மைக்கு மிக முக்கியமான பொருட்களில் வெற்றிலையும் ஒன்று. எந்த ஒரு பூஜை விஷயங்களாக இருந்தாலும் வெற்றிலை இல்லாமல் அதை செய்யவும் மாட்டார்கள். அதேபோல வெற்றிலைக்காம்பு என்ற தனி சிறப்புகளும் உண்டு.

வெற்றிலைக்கு இருக்கக்கூடிய சுவையை விட அதன் வெற்றிலையின் காம்புக்கு தான் அதிகம் இருக்கிறது. அந்த வெற்றிலை காம்பில் நாம் விளக்கு ஏற்றும் பொழுது நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதாவது ஒரு மனிதனுக்கு  இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று,  பண பிரச்சனை தான்.

ஆனால் அதை விட அதிகம் அதிர்ஷ்டம் உள்ளவன், அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று இரண்டு விதமாக பிரிப்போம். ஒருவன் எந்த காரியம் செய்தாலும் அவனுக்கு வெற்றியே கிடைக்கும் . அதனால் அவன் அதிர்ஷ்டக்காரன் என்று கூறுவார்கள். ஒருவன் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு ஹார்ட் வொர்க் பண்ணாலும் அவன்  செய்யக்கூடிய செயல்களில் தடை ,தடங்கல் வந்து கொண்டிருக்கும்.

இவனை  அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று கூறுவார்கள். அதிர்ஷ்டம் நமக்கு இல்லாமல் இருந்தாலும், நமக்கு வாழ்க்கையில் சில கெட்ட நேரங்கள் இருக்கத்தான் செய்யும். அதாவது ஒரு மனிதனுக்கு கெட்ட நேரம் என்று வந்துவிட்டால் நல்ல விஷயங்கள் கூட கெட்டதாக நடக்கும்.

ஆனால் எப்பேர்ப்பட்ட நேரத்தையும் ஒரு குறிப்பிட்ட நேரம் மற்றும். அந்த குறிப்பிட்ட நல்ல நேரத்தை அதிகப்படுத்துவதற்கு தான் இந்த வெற்றிலைக்காம்பு விளக்கேற்றும் ரகசியம். இந்த வெற்றிலை காம்பில் விளக்கு ஏற்றும் பொழுது நமக்கு அனைத்துமே நன்மையாக நடக்கும்.

முதலில் 6 வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள் முதலிலேயே எடுத்துக்கொள்ளுங்கள்  அந்த 6 வெற்றிலையின் காம்புப் பகுதியை கில்லி ஒரு விளக்கில் போட்டுக்கொள்ளுங்கள். அதில் ஏதாவது ஒரு எண்ணெய் ஊற்றவேண்டும். விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம், சுத்தமான நெய் கூட ஊற்றி கொள்ளலாம்.

அதுபோல் ஏற்றும் பொழுது விளக்கை வடக்குநோக்கி  வைக்கவேண்டும். கீழே வெற்றிலையை விரித்து வைத்து அந்த வெற்றிலையின் நடுவில் விளக்கை வைத்து அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் வடக்கு நோக்கி அமரவேண்டும். விளக்கின் ஒளி எரிய ஆரம்பித்த பிறகு, நீங்கள் உங்கள் மனதில் உங்களுக்கு ஆராவின் சக்தி வருவதாக கற்பனை செய்ய வேண்டும்.

வெற்றிலை காம்பின் காரத்தன்மையும், விளக்கின் மையம் ஒன்று கலந்து நமக்கு ஆராவின் சக்தியை அதிகரிப்பதாக நீங்கள் மனதில் வேண்டிக்கொண்டு அந்த அதாவது விளக்கின் ஒளி எரியும் பொழுது அதிலிருந்து வெளிவரும் கூடிய புகையை கையில் கைகூப்பி வைத்து தலையில் இரண்டு நிமிடம் அப்படியே வையுங்கள்.

அதன் பிறகு அந்த ஆரா சக்தி உங்களின் உடம்பில் ஏறும் என்று முழுமையாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு 5 நிமிடம் உட்கார்ந்து அந்த விளக்கை அப்படியே வைத்து விட்டு வந்து விடலாம். இதை நீங்கள் உங்கள் பூஜை அறையில் கூட செய்யலாம். பிறகு நீங்கள் காலை, மாலை என எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம்.

செய்யக்கூடிய நேரம்என்று ஒன்று இல்லை. ஆனால் மாலை நேரத்தில் அந்தச் வெற்றிலையை  தூக்கி வெளியே வீசி விடுங்கள். தினமும் புது வெற்றிலை வைக்க வேண்டும். இதுபோலவே 21 நாட்கள் செய்துவிட்டு வாருங்கள். இதேபோல் தொடர்ந்து செய்யும்பொழுது உங்களுக்கு எல்லாமே அதிர்ஷ்டமாக இருக்கும். உங்களுக்கு இருக்கக்கூடிய துரதிர்ஷ்டங்கள் கொஞ்சம், கொஞ்சமாக குறைய ஆரம்பித்து அதிர்ஷ்டம் ஆகவே மாறும்.

ஜோதிட ரீதியில் சொல்லக் கூடிய மிக முக்கியமானதில்  இதுவும் ஒன்று. இது அதிர்ஷ்டத்தை வரவழைக்கக் கூடிய ஒரு மிக முக்கிய முறை. இதை எல்லோருமே செய்யலாம் . செய்யக்கூடிய  நேரம் எதுவாக  கூட இருக்கலாம். ஆனால் தினமும் புதிய 6 வெற்றிலை பயன்படுத்தவேண்டும்.  புதிய எண்ணெய் பயன்படுத்த வேண்டும். முதல் நாழி ஏற்றிய விளக்கு எண்ணெய் பயன்படுத்த கூடாது.

தினமும் விளக்கை கழுவி புதிதாக யன்படுத்துங்கள். ஆராவின்  சக்தி உங்களுக்கு அதிகரிப்பதாகவே  கற்பனை செய்து கொண்டே இருங்கள் 21 நாட்களுக்குள் உங்களுக்கு வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும்.

Categories

Tech |