சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வழங்கி வருகிறார். தற்போது த.ச.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ஜெய்பீம் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
பழங்குடியின மக்களின் வாழ்க்கை பிரச்சினையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெய்பீம் படத்தின் அதிரடியான புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.