Categories
சினிமா

அதில் ரஜினி நடிக்க விரும்பியதை நான் பெருமையா நினைக்கிறேன்…. நடிகர் சரத்குமார் ஸ்பீச்….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் இடம்பெறும் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டதாகவும், இதற்காக அவர் இயக்குனர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இப்போது இந்த படத்தில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்த அவ்வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார். இந்நிலையில் சரத்குமார் கூறியிருப்பதாவது “பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர் ஆவார்.

பொன்னியின் செல்வன் கதையை படிக்கும் நேரத்தில் பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த வாய்ப்பை தனக்கு அளித்த இயக்குனர் மணிரத்னத்துக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். அவ்வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என எனக்கு தெரியாது. இதனிடையில் ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன்” என்று கூறினார்.

Categories

Tech |