மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் ராமசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளியே சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கணபதியில் இருக்கும் தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் ராமசுப்ரமணியத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராம சுப்பிரமணியத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.