கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செண்டூர் கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் ராஜாராம் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாராம் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜாராம் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.