Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் குருநாதன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் குருநாதன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குருநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று குருநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |