லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் செட்டிபாளையத்தில் யுகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் யுகேந்திரன் குருபரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி யுகேந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த யுகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.