மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இறைச்சிக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் முத்துபாண்டியன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.ஜி.ஓ ‘ஏ’காலனியில் இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டியன் மோட்டார் சைக்கிளில் ரெட்டியார்பட்டி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்து பாண்டியனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.