மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லமுத்து பாளையத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மைலம்பட்டி-பஞ்சப்பட்டி சாலையில் இருக்கும் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சக்திவேலை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.