அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தாளப்பட்டி ரங்கசாமி நகரில் பாத்திமா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த பெண் கரூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பாத்திமா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பாத்திமாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாத்திமா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.