மோட்டர் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆங்கரை கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டாள்(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஆண்டாள் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆண்டாள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆண்டாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.