அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.
மதுரை மாவட்டத்திலுள்ள சூரக்கோட்டை, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் திருமங்கலம்-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை தனியார் பெட்ரோல் பங்க் அருகே இருக்கும் ஊருணியில் புள்ளிமான் ஒன்று தண்ணீர் குடித்தது.
இதனை அடுத்து சாலையை கடக்க முன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் பயங்கரமாக மோதியதால் சம்பவ இடத்திலேயே மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புள்ளி மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் புள்ளிமானின் உடல் காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டது.