Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

” அதி உன்னத கோபுர தரிசனம் ” சிறப்பாக நடைபெற்ற சிவராத்திரி…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூரில் புகழ்பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சாயரட்சை போன்றவைகள் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு மூன்று கால பூஜைகள், லிங்கோத்பவர் அபிஷேகம், பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மாளுக்கு 4-ம் காலபூஜை நடைபெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து  மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி மற்றும் அம்பாள் இராஜகோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன்பிறகு சிறப்பான அதி உன்னத கோபுர தரிசனம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அர்த்தசாம பூஜையுடன் சிவராத்திரி சிறப்பாக முடிவடைந்துள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இதபோல் விருத்தகிரீஸ்வரர் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில் என மாவட்டம் முழுவதும் உள்ள பல சிவன் கோவில்களில் சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

Categories

Tech |