வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறியுள்ளது. அதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறாது என்றும் உணவியல் நாளை மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் அலை இயல்பை விட 3 மீட்டர் உயரத்தில் எழும்பும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8 மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.