Categories
தேசிய செய்திகள்

அதி வேகத்தில் போகும் புது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்…. வரும் 30 ஆம் தேதி முதல்…. பயணிகளுக்கு குட் நியூஸ்….!!!!

ரயில்வேயின் தொழில் நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்திவரும் நிலையில், அதிக வேக ரயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. அதி வேக ரயில்கள் பயணிகளின் விருப்பமாக இருக்கிறது. இதனால் பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு ரயில்வே தரப்பிலிருந்து விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, கூடுதலாக அதி வேக வந்தேபாரத் ரயிகளை இயக்குவதற்கு திட்டம் தீட்டப்படுகிறது. வந்தே பாரத் “வந்தே பாரத் 2” என்ற செமி – ஹை ஸ்பீட் ரயிலின் மேம்படுத்தப்பட்ட ரயில் சேவையை, செப்டம்பர் 30ம் தேதி துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

புது வந்தேபாரத் 2 பல்வேறு அம்சங்களில் முன்பே இருக்கும் வந்தேபாரத் ரயிகளிலில் இருந்து மேம்படுத்தப்பட்டது ஆகும். இந்த ரயில் செப்டம்பர் 30ஆம் தேதியன்று அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு கொடியசைத்து இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக ரயில்வே தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. புது வந்தேபாரத் காரின் பயணிகள் கட்டணம் பற்றி அறிந்துகொள்ள மக்கள் மத்தியில் அதிகஆர்வம் இருக்கிறது. மும்பை-அகமதாபாத் இடையில் இயக்கப்படும் வந்தேபாரத் விரைவு ரயிலில் எக்சிகியூட்டிவ் வகுப்புக்கு, பயணிகள் அடிப்படைக்கட்டணம் ஆக ரூபாய்.2,349 செலுத்த வேண்டுமென ஊடகஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் நாற்காலி வசதிகொண்ட சேர் காரின் அடிப்படைக்கட்டணம் ரூபாய்.1,144 என்ற அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவற்றில் ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை. அந்த புது வந்தேபாரத் மும்பை -அகமதாபாத் இடையில் 2 நிலையங்களில் நிறுத்தப்படும். இது நாட்டின் 2 பொருளாதார நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை பெரிதும் குறைக்கும். ரயில்வே முடிவுசெய்துள்ள கட்டணத்தில், வந்தேபாரத் பயணிகள் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் அடிப்படைக் கட்டணத்தை விட 1.4மடங்கு செலுத்த வேண்டும். அத்துடன் அகமதாபாத்திலிருந்து சூரத்துக்கு வந்தேபாரத் எக்சிகியூட்டிவ் வகுப்பின் அடிப்படைக் கட்டணம் ரூபாய்.1,312 ஆகவும், நாற்காலி வசதி உடைய சேர் காருக்கு ரூபாய்.634 ஆகவும் இருக்கும்.

எக்சிகியூட்டிவ் வகுப்பில் சூரத்தில் இருந்து மும்பைக்கு அடிப்படைக் கட்டணம் ரூபாய்.1,522 ஆகவும், நாற்காலி வசதியுடைய சேர் கார் ரூபாய்.739 ஆகவும் இருக்கும். சென்னை ஐசிஎப் வடிவமைத்துள்ள புது வந்தேபாரத் அதிகபட்சம் மணிக்கு 180 கிமீ வேகத்தில் ஓடக் கூடியது. எனினும் தற்போது ரயில்பாதையில் மணிக்கு 130 கிமீ வேகத்திற்கு மேல் போக இயலாத நிலை இருக்கிறது. இப்போது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் நாட்டில் 2வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், முதல் வழி புதுதில்லியிலிருந்து கத்ராவுக்கும் இடையிலானது. 2வது வழி புதுதில்லியிலிருந்து வாரணாசிக்கும் போகிறது. புது வந்தேபாரத் ரயில்கள் குறைந்த எடை கொண்டது. தேவைக்கேற்ப 32 இன்ச் எல்சிடி டிவிகளை வைபை வாயிலாக இயக்கும் வசதி கிடைக்கும். இந்த ரயிலில் கேடலிடிக் அல்ட்ரா வயலட் காற்று சுத்திகரிப்பு அமைப்பும் பொருத்தப்பட்டு இருக்கும்.

Categories

Tech |