Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அதுக்காக தான் இப்படி பண்ணுறோம்… சுற்றித்திரியும் வனவிலங்குகள்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

வனவிலங்குகள் தண்ணீர் தேடி காட்டுப்பகுதியில் இருந்து கிராமப்புரத்திற்குள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அங்கு மான்கள், காட்டெருமைகள், குரங்குகள் ஆகிய வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் அந்த வனப்பகுதியில் உள்ள சிமெண்ட் தொட்டிகள், நீர்நிலைகள் அனைத்தும் கடும் வெயிலின் காரணமாக வறண்டுபோய் காணப்படுகின்றது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தில் உள்ளன. இந்நிலையில் காட்டை விட்டு வெளிவரும் வனவிலங்குகள் சில சமயங்ககளில் விபத்துகளிலோ அல்லது தவறி கிணற்றுக்குள் விழுந்ததோ இறந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் விதமாக அதிகாரிகள் வனவிலங்குகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வனப் பகுதிக்கு உட்பட்ட சிமெண்ட் தொட்டிகள், தோட்டப் பாடியில் உள்ள குட்டைகள் மற்றும் செம்பாகுறிச்சி ஆகிய இடங்களில் டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் நிரப்பும் பணி விரைவாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பணியில் உளுந்தூர்பேட்டை வனசரக அலுவலர் காதர்பாஷா, வனக்காப்பாளர் ராமநாதன், வனவர் பிரவீன் குமார் மற்றும் வனப் பணியாளர்கள் போன்றோர் தீவிரமாக  ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |