ஸ்ரீநிதி ரமேஷ் ஷெட்டி ஒரு இந்திய மாடல், நடிகை மற்றும் அழகுப் போட்டியின் பட்டம் பெற்றவர் ஆவார். இவருடைய சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டார். இவருக்கு சிறுவயதிலேயே நடிக்க வேண்டும், மாடலிங்க் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. இருப்பினும் படிப்பை முடிக்க வேண்டும் என்பதால் படித்து விட்டு ஒரு IT வேலை செய்து வந்துள்ளார். அப்போது தனது அப்பாவிடம் வேலையை விட்டுவிட்டு மாடலிங்க் செய்யப்போவதாக கூறியுள்ளார்.
அதற்கு அவருடைய அப்பா சம்மதித்துள்ளார். அதன் பின்னர் 2015 இல் மணப்புரம் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் பட்டங்களை வென்றார். பின்னர் மணப்புரம் மிஸ் குயின் ஆஃப் இந்தியாவில் பங்கேற்றார், அங்கு அவர் 1 வது ரன்னர் அப் ஆக முடிசூட்டப்பட்டார் மற்றும் மிஸ் கன்ஜினியாலிட்டி என்றும் பெயரிடப்பட்டார். அக்சென்ச்சர் நிறுவனத்தில் பணிபுரியும் போது மாடலாகவும் பணியாற்றினார்.
மிஸ் சுப்ரநேஷனல் பட்டத்தை வென்ற பிறகு, அவருடைய புகைப்படங்கள் செய்தித்தாள்கள், இணையத்தில் வெளிவர தொடங்கியதையடுத்து ஷெட்டி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார். ஷெட்டி 2018 ஆம் ஆண்டு கன்னட பீரியட் ஆக்ஷன் படமான கே.ஜி.எஃப்-1 இல் யாஷுடன் இணைந்து அறிமுகமானார்.