விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ஒரு வரவேற்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம். இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. இதனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். அதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது. இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில் விரைவில் தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ரவீந்தர் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சமீபத்தில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம் இணையத்தில் மிகவும் வைரலான நிலையில் சேனல் தரப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.புதிதாக திருமணமான நிலையில் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றால் தம்பதிகள் தலை தீபாவளியை எப்படி கொண்டாடுவார்கள் என ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.