விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் விளையாடுகிறார்கள். இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் மீண்டும் சண்டையிட வைத்துள்ளது. பேக்டரியாக மாறியுள்ள பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கு பஞ்சமே இல்லை என்ற அளவில் போட்டியாளர்கள் அனைவரும் மிக தீவிரமாக விளையாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மைனா சாப்பாடு கேட்டு சண்டை போட்டுள்ளார். சாப்பாடு, காப்பிக்கு கூட உங்களிடம் கெஞ்ச வேண்டுமா என்று சமையலறையில் இருப்பவர்களிடம் கேள்வி எழுப்புகிறார். இதனை அடுத்து மகேஸ்வரிக்கும் மைனாவுக்கும் சண்டை ஏற்படுகிறது. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.