மது குடிக்க தாய் பணம் தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமநல்லூர் சாத்தான் கோவில் தெருவில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நிசாந்த் தனது தாயிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தாயார் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த நிஷாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் நிஷாந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நிஷாந்த் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.