மதுரை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞர் கல்லுரியில் எம்.எஸ்.சி படித்து வருகிறார். இவர் தனது தங்கைக்கு அரசுப்பள்ளியில் வழங்கப்பட்ட சைக்கிளை அறிவுத்திறனை பயன்படுத்தி மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார்.
இந்த பைக் தற்போது சுமார் 40 கி மீ வரை ஓடும் எனவும் 20 கி மீ வரை சென்றால் தானாகவே சார்ஜ் ஏறும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தனுஷ் குமார் கூறியுள்ளார். ஆனால் இந்த பைக்கை பயன்படுத்துவதற்கு ஃபிட்னஸ் சான்றிதழ் அவசியம் என்று மத்திய அரசு கூறியுள்ளதால் இதனை சாலையில் ஓட்டி செல்ல முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.