நாகை கோடியக்கரை அருகே பறவைகளை சுட்டு வேட்டையாடி கொண்டிருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் வனத்துறை அதிகாரிகள், வனச்சரகர் அயூப்கான், வன உயிரினக் காப்பாளர் கலாநிதி, தஞ்சாவூர் மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒருவர் நாடேட்டி குளத்தில் வந்து அமரும் பறவைகளை ஏர்கன் மூலம் சுட்டு கொண்டிருந்தார்.
அதனைக் கண்ட வனக்காப்பாளர் முனியசாமி, வனவர் சதீஷ்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் லோகநாதன், சுதாகர் ஆகியோர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் கீழ ஆறுமுகம் கட்டளை பகுதியில் வசித்து வரும் விஜயன் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.