Categories
அரசியல்

அது அனைத்து கட்சி கூட்டம் இல்ல!…. கூட்டணி கட்சி கூட்டம்…. ஜெயக்குமார் ஆவேசம்….!!!!

இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து விவாதித்து தெளிவான முடிவெடுப்பதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அதிமுக அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்திற்கு நீட் வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை, நீட் தேவை இல்லை என்பது அதிமுகவின் கொள்கை. திமுக அறிவித்திருந்தது அனைத்து கட்சி கூட்டம் கிடையாது. அது கூட்டணி கட்சி கூட்டம். மேலும் அதிமுக நீட் விலக்கு குறித்த தீர்மானத்திற்கான சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |