Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அது இல்லாம ஏன் கொண்டு போறீங்க..? வாகன சோதனையில் சிக்கியவர்கள்… பறக்கும் படை அதிரடி..!!

சிவகங்கையில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.9 1/4 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டை விலக்கு ரோட்டில் சிவகங்கை மாவட்டம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான குழுவினர், மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் காரில் ரூ. 9 லட்சத்து 23 ஆயிரம் பணம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து காரில் வந்த பிரான்சிஸ் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் பின் அந்த பணத்தை சிவகங்கை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |