புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு டெபிட் கார்டுகளை வழங்கியுள்ளார்.
நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களது உயர்கல்வியில் சேர்வதற்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் தொகை திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைதான திமுக அரசு புதுமைப்பெண் என்று மாற்றி அமைத்தது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்களது உயர்கல்வியை தொடர்வதற்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்காக நமது தமிழக அரசு penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுமைப்பெண் என்ற அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு வழங்கியுள்ளார்.
மாணவிகள் இந்த டெபிட் கார்டை வாங்கியவுடன் அவர்களின் செல்போனிற்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில் கல்வியின் துணைகொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன் என வந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 லட்ச மாணவிகள் பயன்பெறுவார்கள். எனது வாழ்க்கையின் மகத்தான மற்றும் மகிழ்ச்சியான நாள் இன்று . மேலும் நமது தமிழக அரசின் இந்த புதுமைப்பின் திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும். தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அவற்றை மேம்படுத்தாவிட்டால் தேசியத்தின் வளர்ச்சி கேள்விக்குறி எனவும், தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தில் இணைந்திடும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.