Categories
சினிமா தமிழ் சினிமா

அது எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் சரி!… அதுக்காக நான் தூக்கிட்டு சாக மாட்டேன்!… பொங்கி எழுந்த ரேகா நாயர்….!!!!

சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் தனதில் மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக பேசக் கூடியவர் ஆவார். அதிலும் குறிப்பாக பெண்கள் சார்ந்த விஷயங்களிலும், பெண் உரிமை பற்றியும் பல முறை கருத்துகள் தெரிவித்துள்ளார். மேலும் சினிமா நடிகைகள் பற்றி அவதூறாக பேசும் பயில்வான் ரங்கநாதன் உள்பட பலரையும் அவர் விளாசி வருகிறார்.

இதற்கிடையில் ரேகாவின் கருத்துகளை சில பேர் ஆதரித்தாலும், பலர் அவரை மிகவும் மோசமான முறையில் விமர்சித்து வருகின்றனர். அத்துடன் அவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களை தவறான முறையில் மார்பிங் செய்து கொச்சையாக சித்தரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவரது பெயரில் போலியான சமூகவலைதள கணக்குகளை துவங்கி தவறான வழியில் பயன்படுத்துகின்றனர்.

இதுகுறித்து ரேகா எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில் “தினசரி நான் செய்கிற செயல்களை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியிடுவது யாருக்காவது அது பயன்படும் என்ற நல்ல நோக்கத்தில் மட்டும்தான். அதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம்.

இதனிடையில் அதற்கென நான் தூக்கிட்டு சாகப் போவது கிடையாது. இருப்பினும் போலி கணக்குகளை உருவாக்கி தவறான முறையில் சிலர் பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள் எனது கைகளில் கிடைத்தால் வேறு மாதிரி ஆகிவிடும். அது எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் சரி” என்று அவர் எச்சரிகை விடுத்துள்ளார்.

Categories

Tech |