சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரணியூர் கோவிலில் மாயமான சிலைகள் குறித்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே இரணியூர் கோயில் உள்ளது. இது மிக சிறப்பான கலைநயத்துடன் அமைந்துள்ள கோவில் ஆகும். இதில் கற்சிற்பக் கோவில் கி.பி. 713 ஆம் ஆண்டில் காருண்யா பாண்டிய மன்னர்களினால் கட்டப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடுகின்றனர். இந்த கோவிலில் 1948-ஆம் ஆண்டு வருடத்திய சொத்து பதிவு ஏட்டை வைத்து கோவில் செயல் அலுவலர் சுமதி கோவிலில் உள்ள சிலைகளை ஆய்வு செய்தார்.
அதில் ஸ்கந்தர், சோமஸ்கந்தர், தனி அம்பாள், பிரியாவிடை அம்மன், சுந்தரமூர்த்தி, ஞானசம்பந்தர், நித்திய உற்சவ அம்பாள், நித்திய உற்சவம் சுவாமி ஆகிய பழமையான 8 சிலைகள் மாயமாகி இருப்பதை கண்டறிந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் குற்றவழக்கு பதிவு செய்து சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.