விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். அதன்படி இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செப் என்கிற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பேசிய விஜய் சேதுபதி ‘நல்லா சமைக்கும் கைக்கு மோதிரமோ, வளையலோ தரலாம்னு சொல்லுவாங்க.
டேஸ்ட் பண்ண ரெடியா இருங்க!
மாஸ்டர் செஃப் – தமிழ் | விரைவில்… #SunTV #MasterChef #MasterChefTamil #MasterChefOnSunTV @VijaySethuOffl pic.twitter.com/jWKPB5XaiS
— Sun TV (@SunTV) July 1, 2021
ஆனால் அன்பா சமைத்து பரிமாறுபவர்களுக்கு தங்கம் ஈடாகாது. அது ஒரு குட்டி லஞ்சம் தான். கொடுத்தாலும் தப்பில்லை. ஆனா அவங்க மனசு எதிர்பார்ப்பது எல்லாம் நம்ம அன்பா அத பாராட்டி சொல்லும் இரண்டு வார்த்தை தான். அப்படி நம்ம கூடவே இருப்பவர்களின் அசத்தல் சமையலை உலகமே கொண்டாடும் மேடை தான் இது. மாஸ்டர் செஃப் இது நம்ம மக்கள் சமைக்கும் டக்கர் சமையல். டேஸ்ட் பண்ண ரெடியா இருங்க’ என கூறுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.