ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கு பின் சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சிறைச்சாலை ஒரு சாக்கடை, சுடுகாடு, புதைகுழி. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேன். எனினும் தொடர்ந்து விடுதலைக்கான முயற்சிகளை செய்து வந்தேன். இனி என் மகளுடன் லண்டனில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளேன்.
சிறையில் இருந்து 6 ஆண்டுகள் கல்வி கற்றேன். எம்.சி.ஏ பாடத்தில் 198 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். இதைத்தவிர பிட்னஸ் அண்ட் நியூட்ரிஷன், பிசினஸ் ஸ்கில்ஸ் போன்ற படிப்புகளையும் படித்தேன். 7 பேர் விடுதலைக்காக போராடியவர்களை சந்தித்து நன்றி சொல்ல ஆசையாக உள்ளது. தமிழக முதல்வரை சந்திப்பது அவருக்கு சிரமம் ஏற்படுத்தும் என்பதால் சந்திக்க தயக்கமாக உள்ளது என கூறினார்.