திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களை சந்தித்த போது , மோடியை விமர்சித்தால் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என பா.ஜ.கவின் முரளிதர ராவ் கூறியுள்ளது, தன்னுடைய பதவியை தக்கவைத்துக் கொள்ள என்று குற்றம் சாட்டினார்.
மேலும் பாஜகவை கடுமையாக சாடிய அவர் ,தமிழ்நாட்டில் தலைவரை நியமனம் செய்ய முடியாத பாஜகவால் எப்படி ஆட்சியை கைப்பற்ற முடியும். அவர்களால் ஆட்களை தான் விலைக்கு வாங்க முடியும் , தமிழ்நாட்டை வாங்க முடியாது.பாஜக ‘ஒரு மிஸ்டுகால் கட்சி’ எனவே தான் அது மிஸ்டுகால் தலைவர்களை தேடிக்கொண்டு இருக்கின்றது என்று விமர்சித்தார்.