அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றை தலைமை மற்றும் இரட்டை தலைமை குறித்து கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சில மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
அந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கழகத்தின் நலனை கருதி வருகின்ற 23 ஆம் தேதி நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும், அடுத்த கூட்டத்திற்கான இடம்,நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.