Categories
தேசிய செய்திகள்

அது நாங்க கிடையாது…! உள்ளே நுழைச்சுட்டாங்க…. விவசாய போராட்டத்தில் பரபரப்பு …!!

வன்முறைக்கும் எங்களுக்கு எந்த தொடர்புமில்லை என விவசாய சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 60 நாட்களாக நடைபெற்று வந்தபோது  பலமுறை விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊடகவியலாளர் தாக்கியவரை பிடித்த டெல்லி விவசாயிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்கள். சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கியுடன் அலைந்த ஒரு மர்ம நபரை பிடித்து டெல்லி காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்தார்கள்.

இப்படியாக தொடர்ச்சியாக மர்ம நபர்களை அடையாளம் காண விவசாயிகள் உதவி செய்து வந்த நிலையில் நேற்று நடந்த வன்முறை குறித்தும், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கைமீறி சென்று விட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு விவசாய சங்கம் பதிலளித்துள்ளது.

பாரதிய கிசான் சங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளராக கூடிய ராகேஷ் சுகானி கூறுகையில், வன்முறையில் ஈடுபடுவோருக்கும், விவசாயிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் கட்சியின் போர்வையில் வந்து டிராக்டர் பேரணியில் கலந்துகொண்டு வேண்டுமென்றே இப்படி போராட்டத்தை வன்முறையாக மாற்றி இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காணக்கூடிய பணிகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

புகைப்படங்கள் வீடியோ ஆதாரங்களை கொண்டு அவர்கள் யார் ? எங்கிருந்து வருகிறார்கள் ? என்ற விஷயங்களை காவல்துறையினரிடம் நாங்கள் கொடுப்போம். இந்த போராட்டம் தொடர்ந்து அமைதியான முறையில் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம் என்றார். அதேபோல் மற்ற விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களும் இதே விளக்கத்தை கொடுத்துள்ளார்கள்.

Categories

Tech |